×

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 36 கோயில்களில் ரூ.592.38 கோடி மதிப்பீட்டிலான 43 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.02.2024) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 592 கோடியே 38 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 36 திருக்கோயில்களில் கட்டப்படவுள்ள புதிய இராஜகோபுரம், திருமண மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகங்கள், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பல்நோக்கு மண்டபம், வசந்த மண்டபம், முடிகாணிக்கை மண்டபம், கலையரங்கம், அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு, பக்தர்களுக்கு ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள், வள்ளலார் சர்வதேச மையம் அமைத்தல், ஆன்மிக கலாச்சார மையம், உதவி ஆணையர் அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பறை கட்டடங்கள், ஓதுவார் பயிற்சிப் பள்ளி மற்றும் பெண்கள் தங்கும் விடுதி போன்ற 43 புதிய திட்டப் பணிகளுக்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இந்து சமய அறநிலையத்துறையானது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்ட செயலாக்கம், 1,379 திருக்கோயில்களில் குடமுழுக்கு, திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், அன்னதானத் திட்டம் விரிவாக்கம், மலைத் திருக்கோயில்கள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைத்தல், புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை செம்மையாக செயல்படுத்தி வருவதோடு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் தொடர்ந்து நிறைவேற்றபட்டு வருகின்றன.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலில் 159 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்களுக்கு ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள்; திண்டுக்கல் மாவட்டம், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 106.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் நூலகம் கட்டும் பணிகள்; கடலூர் மாவட்டம், வடலூர், திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 99.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகள்; விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 65.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முகப்பு தோரண வாயில்கள் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தல், முடிக்காணிக்கை மண்டபம் விருந்து மண்டபங்கள் மற்றும் கலையரங்கம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள்.

சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் 28.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஆன்மிக கலாச்சார மையம்; தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 19.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடற்கரையில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி; மதுரை மாவட்டம், அழகர்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில், 12.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கள்ளந்திரி, பூவக்குடி கிராமத்தில் உள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் திருமண மண்டபம் மற்றும் திருக்கோயில் வளாகத்திலுள்ள மேற்குப்புற கோட்டைச் சுவர் திரும்பக் கட்டும் பணிகள்; காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள சென்னை, அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு 11.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வகுப்பறைக் கட்டடம்.

நாமக்கல், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் 9.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருமண மண்டபம்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் 8.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி; சென்னை, பூங்காநகர், அருள்மிகு முத்துக்குமாரசுவாமி தேவஸ்தான திருக்கோயிலில் 5.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வணிக வளாகம்; கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 5.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வசந்த மண்டபம் மற்றும் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம்; கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை, ஸ்ரீதேவி குமாரி மகளிர் கல்லூரியில் 5.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வகுப்பறைக் கட்டடம்; தேனி மாவட்டம், கம்பம், அருள்மிகு கம்பராயப்பெருமாள் திருக்கோயிலில் 3.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருமண மண்டபம்.

வேலூர் மாவட்டம், பேரிப்பேட்டை, அருள்மிகு காளியம்மன் திருக்கோயிலில் 3.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வணிக வளாகம்; திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல், அருள்மிகு காளகத்தீஸ்வரர் திருக்கோயிலில் 3.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருமண மண்டபம்; கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆதிதிருவரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் 3.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமதில் திரும்ப கட்டும் பணி; தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் 3.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மின் தூக்கி அமைக்கும் பணி; கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் 3.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பக்தர்கள் ஓய்வு மண்டபம் மற்றும் வரிசைத் தடுப்புகள் அமைக்கும் பணி; இராமேஸ்வரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பாதுகாப்பு சுவர் மற்றும் அருள்மிகு பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கட்டப்படவுள்ள வகுப்பறைக் கட்டடங்கள்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு விண்ணவரம் பெருமாள் திருக்கோயிலில் 2.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருமண மண்டபம்; சென்னை, தங்கசாலை தெரு, அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் 2.64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வணிக வளாகம்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 2.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஓதுவார் பயிற்சி பள்ளி மற்றும் பெண்கள் தங்கும் விடுதி; சென்னை, தேனாம்பேட்டை, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் ஆலையம்மன் திருக்கோயிலில் 2.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வணிகவளாகம்; கள்ளக்குறிச்சி மாவட்டம், பரிக்கல், அருள்மிகு லட்சுமிநரசிம்மசுவாமி திருக்கோயிலில் 2.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கல் மண்டபம்.

சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயிலில் 2.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அர்ச்சகர் மற்றும் பணியாளர் குடியிருப்பு, வாகன நிறுத்தும், பொதுக்கழிப்பிடம் அமைக்கும் பணிகள்; காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர், அருள்மிகு நாகேச்சரசுவாமி திருக்கோயிலில் 1.99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வணிக வளாகம்; விழுப்புரம் மாவட்டம், பெருவளூர், அருள்மிகு கோட்டீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் 1.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருமண மண்டபம்; கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், அருள்மிகு தாணுமலையான் சுவாமி திருக்கோயிலில் 1.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வணிக வளாகம்; திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, அருள்மிகு முள்ளாட்சி மாரியம்மன் திருக்கோயிலில் 1.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள திருமண மண்டபம்;  கோயம்புத்தூர் மாவட்டம், பூண்டி, அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலில் 1.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பக்தர்கள் தங்கும் கூடம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சியில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உதவி ஆணையர் அலுவலகம்; சென்னை, தங்கசாலை தெரு, அருள்மிகு பிரசன்ன விநாயகர் திருக்கோயிலில் 1.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வணிக வளாகம்; தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல், அருள்மிகு தேசநாதீஸ்வரர் திருக்கோயிலில் 1.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஐந்து நிலை இராஜகோபுரம்; சென்னை, வேளச்சேரி, அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயிலில் 1.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பல்நோக்கு மண்டபம்; செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர், அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயிலில் 1.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வணிக வளாகம்; என மொத்தம் 36 திருக்கோயில்களில் ரூ.592.38 கோடி மதிப்பீட்டிலான 43 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

The post இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 36 கோயில்களில் ரூ.592.38 கோடி மதிப்பீட்டிலான 43 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Foundation ,K. Stalin ,Chennai ,Chief Minister of ,Tamil Nadu ,Rajakhapura ,Hindu Religious Foundation Department ,
× RELATED அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்...